5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version