நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நீலகிரியில் பகல் நேரங்களில் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று ஊட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மிதக்கும் படகுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மழைபாதிப்பு அதிகம் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு அவர்கள்(தேசிய பேரிடர் மீட்புப் படையினர்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

-பா.ஈ.பரசுராமன்

Exit mobile version