தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மேற்குதிசை வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யலாம். நீலகிரி,கோவை, திண்டுக்கல், திருப்பூர்,தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை,கன்னியாகுமரி மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைபெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
