டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

Exit mobile version