காலையில் காவலர்.. இரவில் கொள்ளையன்: நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த காவலர் சஸ்பெண்ட்..!

காலையில் காவலர், இரவில் கொள்ளையன், என்ற வேஷம் போட்டு கொள்ளையடித்து கொண்டு இருந்த காவலர் கைது.

திருடர்களை தடுக்கத்தான் போலீசார் இருக்கின்றனர். சில சமயங்களில் வேலியே பயிரை மேய்ந்தாற்போல் போலீசார்களே திருட்டுத்தொழிலை எடுத்து நடத்தினால் என்ன செய்வது?. மக்களை காக்க வேண்டிய காக்கி சட்டையே சில நேரங்களில் மக்களின் வாழ்வை சூறையாடுகின்றது.

போலீசிடம் பொது மக்களுக்கு எப்போதுமே மரியாதை உள்ளது அதை கெடுப்பதற்கென்றே சிலர் காவல் துறையில் இருக்கின்றனர். மேலும் அது போன்ற போலீஸ்களால் காவல் துறைக்கு பங்கம் ஏற்பட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த காவலர் கற்குவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவர் காலையில் காவலராகவும், இரவில் கொள்ளையனாகவும் இருந்து திருடி வந்துள்ளார். இதனை கண்டு பிடித்த காவல் துறை கற்குவேல் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் இதுபோல் நடக்காமல் இருக்க தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version