பூமியை தாக்கும் சோலார் புயல் நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

solar storm
solar storm

இன்று 17 வகை ஒளிச்சிதறல்களுடன் சூரிய புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை கரும்புள்ளிகள் தோன்றுவது வழக்கம். கடந்தசில நாட்களாக அதிகளவில் கரும்புள்ளிகள் தோன்றி வருகின்றன. வரும் நாட்களில் இது மேலும் அதிகரித்து சூரியகாந்த புயலாக மாறும் என கூறப்படுகிறது.

கடந்த வாரத்த்தில் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையம் மார்ச் 30 ம் தேதி 8 முறை சூரிய காந்த புயல்கள் பூமியை தாக்கியதாக தெரிவித்தது. த‌ற்போது தொட‌ங்கியுள்ள‌ 25 வ‌து சுழ‌ற்சியில் புள்ளிக‌ள் தொட‌ர்ந்து விரிவ‌டைந்தால் சூரிய‌ காந்த‌ புய‌ல் ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனால் பூமியின் வெப்பநிலை வழக்கத்தைவிடவும் அதிகமாக இருக்கும். சூரிய காந்த புயல் ஏற்பட்டால் தொலை தொடர்பு பாதிப்படையும், பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் சூரியனை தொடர்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவுசெய்து, ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version