திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு; 77 மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு!

சென்னை மட்டும் 10 மாவட்டங்களாக பிரிப்பு; சோழிங்கநல்லூர் தனி மாவட்டம்

திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110 ஆக அதிகரித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்புக் குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் கட்சியின் முன்னணியினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தலைநகர் சென்னை மட்டும் அமைப்பு ரீதியாக 10 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. அதிக மக்கள்தொகை கொண்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களின் அடிப்படையில் நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிளை அமைப்புகளை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகளை மாவட்டச் செயற்குழுக்கள் 15 நாட்களுக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய மாவட்ட அமைப்புகளுக்கான நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Exit mobile version