சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் நிறைவடைகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் மேலும் சசிகலா அவர்கள் செலுத்த வேண்டிய அபராத தொகை 10 கோடி ரூபாயை இன்னும் செலுத்தாததால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ம் தேதி வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கர்நாடக சிறை துரையின் சார்பில் தகவல் தெறிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சசிகலா அவர்கள் சிறை கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் உள்ளிட்ட அடிப்படையில் சலுகைகள் பெறப்பட்டு சிறை தண்டனை குறித்து முன்கூட்டியே விடுதலையாக போவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே நிலுவையில் இருந்த பத்து கோடி ரூபாய் அபராத தொகையை இன்று செலுத்துகிறார்.
மேலும் தன் அபராத தொகையை செலுத்துவதற்காக 2 வங்கிகளில் வரைவோலை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அபராதத் தொகைக்கான வரைவோலை நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் இதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் நிறைவடைகிறது எனவும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.