தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம்… கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண் சட்டங்கள்
சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச ஆதரவு விலை பறிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.

மத்திய வேளாண் சட்டங்களினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதை மக்களிடையே பரப்புரை செய்வதற்காக 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொருத்தப்பட்ட ஊர்வலத்தை நடத்துவதற்குக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஏர்கலப்பை ஊர்வலம்
தமிழகத்தில் 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொருத்தப்பட்ட ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலையப் பேச்சாளர்கள் ஆகியோர் பங்கேற்கிற வகையில் பரப்புரை பயணத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் திட்டமிட்டு நடத்தும்.

ராகுல்காந்தி பங்கேற்பு
தமிழகம் முழுவதும் நடைபெறும் ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில அளவில் நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார். தமிழகம் முழுவதும் எந்தத் தேதியில் ஏர் கலப்பை ஊர்வலம் தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version