ஐபிஎல்: கோலி படையை வேட்டையாடிய வார்னரின் ஐதராபாத்.. நீளும் பிளேஆப் மோதல்

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த 7 விக்கெட்டுகளை இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக பிலிப்பே 32 ரன்களை சேர்த்தார். ஐதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 121 ரன்களை எடுத்தால் என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய, சாஹா உடன் வார்னர் களமிறங்கினார். அட்டகாசமான சிக்சருடன் ஆட்டத்தை தொடங்கிய வார்னர் 8 ரன்களுக்கு, வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களுக்கும், சாஹா 39 ரன்களுக்கும் சாஹல் பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்., நிதானமாக ஆடிவந்த வில்லியம்சனும் உடனா பந்துவீச்சில் கோலியிடம் பிடிபட்டார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டால் ஐதராபாத் அணி தடுமாற, ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது.

இறுதி கட்டத்தில் ஹோல்டர் அதிரடியாக ஆடி 2 சிகசர்கள் விளாச, 14.1 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை ஐதராபாத் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Exit mobile version