ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

துபாய் :
ஐ.பி.எல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவின் வேக ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம்பிடித்திருந்தார்.
அந்த போட்டியில் அவர் பந்து வீசும் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு அதன்காரணமாக ஓவரை முழுமையாக முடிக்க முடியாமல் வெளியேறினார். இந்த நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக சிறந்த ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் வெளியேறுவது ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.அவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை ஐதராபாத் அணியில் இணைவார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.