என்னை… கொஞ்ச … கொஞ்ச …கொஞ்ச … கொஞ்ச…வா மழையே…

கொளுத்தும் வெயில் நீங்கி, குளு குளுவென மழைக்காலம் தொடங்க போகிறது. அதனால் நாம், இந்த மழையில் நனைய விரும்புவோம். இதனால் நமது உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். இந்த குறிப்புகளை பின்பற்றி நமது ஆரோக்கியத்தை தக்க வைக்க முடியும்.

சுட்டெறித்த வெப்பத்திலிருந்து, நமக்கு நிம்மதியளிக்கும் விதமாக மழைக்காலம் தொடங்க போகிறது. ஆனால் மழை பெய்த பின், சுற்றுப்புறத்தில் அதிகரிக்கும் புழுக்கம் காரணமாக வைரல், பாக்டீரியா மற்றும் ஃபங்கல் தொற்று ஏற்படும். இதன் விளைவாக டெங்கு, மலேரியா ஆகியவை அதிகரித்து விடும். என்னை… கொஞ்ச … கொஞ்ச …கொஞ்ச … கொஞ்ச…வா மழையே என சந்தோஷமாக மழையை அனுபவிக்க சில ஆரோக்கியமான வழிகள் .

கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு :

கோடையில் டெங்கு மற்றும் மலேரியா நோய்  காணப்பட்டாலும்  இந்நோய் மழைக்காலத்தில் தீவிரமடையும். தேங்கும் மழை நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால்,  பாதிப்பும் அதிகமாக இருக்கும். காற்றில் ஈரப்பதம் ஆக ஆக கொசுக்கள் எண்ணிக்கை  கூடும். அதனால் கொசுக்களால் ஏற்படக்கூடிய நோய்கள் மழைக்காலத்தில் அதிகமாக காணப்படும். அதனால் வீட்டிற்கு அருகில் தண்ணீரை தேங்க விடாதீர்கள்.

கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு

போதிய அளவு தண்ணீர் பருகவும்

மற்ற மாதங்களைப் போல் மழைக்காலத்திலும் ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியம். சுத்தமான நீரை தேவையான அளவு குடிக்கவும். அதனால் உங்கள் உடம்பிலும், சருமத்திலும் நீர் சத்து நிரம்பி இருக்கும். இதன் மூலம்  தொற்று நோயுடன் போராட சக்தி கிடைக்கும். கூடவே நீர்ச்சத்து குறைப்பாட்டிலிருந்தும் தப்பிக்கலாம். இதைத் தவிர தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் வழியாக  வெளியேறும்.

போதிய அளவு தண்ணீர் பருகவும்

பாக்டீரியா மற்றும் ஃபங்கல் தொற்றிலிருந்து பாதுகாக்க

     மழைக்காலத்தில் பாக்டீரியல் மற்றும் ஃபங்கல் தொற்று மிக வேகமாகப் பரவும். மழைக்காலத்தில் தட்பவெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்க சாதகமான சூழலை உருவாக்குகிறது. சருமத்தில் தொற்று ஏற்படாமல் தப்ப, அதிக நேரம் மழையில் நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் காரணமாக ஃபங்கல் தொற்றும் பரவும். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள, ஆன்டி பாக்டீரியல் சோப், க்ரீம் மற்றும் பவுடர் ஆகியவற்றை உபயோகிக்கவும். முக்கியமாக மிருதுவான சருமம் என்றால் ஈரப்பதம் அதிகமான காலத்தில் ஃபங்கல் வேகமாக பரவும். மடங்கும் இடங்களில் சிவப்பு தழும்பு ஏற்படும். இதை தவிர எண்ணெய் பசை அதிகமுள்ள சருமத்தில் பருக்கள் வரத் துவங்கும். மழைக்காலத்தில் அதிக நேரம் சாக்ஸ் அணிய கூடாது. குளித்த பின் துண்டால் உடல் மற்றும் தலையை துடைத்து காய வைக்கவும். கைகளை எப்போது கழுவினாலும், நன்கு துடைக்கவும். காற்றோடமான செருப்பு அணியலாம்.

பாக்டீரியா மற்றும் ஃபங்கல் தொற்றிலிருந்து பாதுகாக்க

வெளி பொருட்களை தவிர்க்கவும்

மழைக்காலங்களில்  சுட சட பொறித்த சிக்கனை கடையில் வாங்கி சாப்பிடுவது பலருக்கு பிடிக்கும். ஆனால் மழைக்காலங்களில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் எளிமையான, விரைவில் ஜீரணிக்க கூடிய உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என்பதால் கடையில் இருந்து வாங்கி சாப்பிடும் உணவை தவிர்க்கவும்.

வெளி பொருட்களை தவிர்க்கவும்

கண்களில்  சுத்தம் அவசியம்

மழைக்காலத்தில் வைரல் தொற்று கண்களில் ஏற்பட வாய்ப்பு அதிகம் . இதனால் கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் சுத்தம் செய்யவும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன் சோப்பு போட்டு முகத்தையும், கண்களையும் கழுவவும். தினசரி தூங்கச்செல்லும்.

கண்களில்  சுத்தம் அவசியம்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சரியான நேரத்தில் சாப்பிடுவதும், தூங்குவதும் அவசியம். தினசரி சாறுள்ள பழங்கள் மற்றும் பச்சை  காய்கறிகளையும், நார்சத்து நிரம்பிய காய்கறிகளை சாப்பிடவும். ஆப்பிள், மாதுளம்பழம், பேரிக்காய் ஆகியவற்றை கட்டாயம் சாப்பிடவும். உணவில் பூண்டு அல்லது தயிர் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

சுத்தம், சுகாதாரம் அவசியம்

தினமும் பேருந்து, ஆட்டோ போன்ற கூட்டம்  நிறைந்த போக்குவரத்து சாதனங்களை உபயோகிக்கிறோம். அவர்களில் யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம். அதனால் வீடு திரும்பியவுடன் முதலில் கை, கால் மற்றும் முகத்தை நன்கு சோப்பு போட்டு கழுவவும். முடிந்தால் குளிப்பது கூட நல்லது. பிறகு நன்கு துடைப்பதும் அவசியம்.

Exit mobile version