வடசென்னை பகுதியில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வடசென்னை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அடுத்த மாத இறுதி வாரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் தென்சென்னை பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக வடசென்னை பகுதிகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பிரிட்டானியா நகர், புழல் ஏரி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.

Exit mobile version