தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்டு 1ம் தேதி முதல் ஆகஸ்டு 4ம் தேதி வரை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும். மழைநீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுன் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இடி,மின்னல் ஏற்படக்கூடும் என்பதால் ஆடு மேய்ப்பவர்கள் வெட்ட வெளியில் நடக்க வேண்டாம். மரங்களுக்கு கீழே ஒதுங்க வேண்டாம். காய்ச்சிய குடிநீரை பருகுங்கள். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து புகாரளிக்க 04633 290548 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்