காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக,இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version