தொடர்ந்து இரண்டாவது நாளான பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள், சாமானிய மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியாவில் 137 நாட்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.76 காசுகள் அதிகரித்து ரூ. 102.16-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 92.19-க்கும் விற்பனையானது.
இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 0.75 காசுகள் அதிகரித்து ரூ. 102.91-க்கு விற்பனையாகிறது. அதேபோல டீசல் நேற்றைய விலையில் இருந்து 0.76 காசுகள் அதிகரித்து ரூ 92.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு உக்ரைன் – ரஷ்யா இடையே நிலவி வரும் போர் காரணமாக சொல்லப்படுகிறது. முன்னதாக நேற்று பெட்ரோல், டீசல் விலையுடன் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
