நிவர் புயல் காரணமாக தென் மாவட்டங்கள் செல்லும் அணைத்து ரயில்களும் ரத்து.
நிவர் புயலானது அதி தீவிர புயலாக மாறி நாளை கரையை கடவிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தாழ்வான பகுதிகளுக்கு அருகே முகாம் அமைத்து அவர்களுக்கு தேவையானவை செய்து தரப்பட, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இன்று பேருந்து சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்னும் 12 மணிநேரத்தில் நிவர் புயல் வலுவடையும் என கருதப்படுகிறது. எனவே சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அணைத்து ரயில்களும் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்பட உள்ளது.
அதாவது எழும்பூர் ரயில் நிலையத்திருந்து மதுரை மற்றும் ராமேஸ்வரம் வரை செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே ஆணையத்தில் நேற்று செய்து ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 24 ரயில்கள் நாளை இயக்கப்படாது.