கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியம் என யுஜிசி தெரிவித்துள்ளது.
தற்போது கொரொனா காலக்கட்டம் என்பதால் இன்னும் கல்லூரிகள் பல்கலைக்கழங்கள் இந்தியாவில் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் கல்லூரிகளில் இறுதிப் பருவத்தேர்வுக்கு மாணவர்களுகு அவர்கள் முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளித்து தேர்ச்சி அடையச் செய்வதாக தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கில் யுஜிசி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அதில் கல்லூரிகளில் இறுதிப்பருவத் தேர்வு கட்டாயம் என கூறியுள்ளது.
மேலும், இறுதி செமஸ்டர் மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பெண் அடைப்படையில் தேர்ச்சியடையச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளது.