எண்ணைய் குழாய் திட்டம் வேண்டவே வேண்டாம்…வைகோ வலியுறுத்தல்

விளைநிலங்களில் எண்ணைய் குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

விளைநிலங்களில் எண்ணைய் குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று கூறும்போது,”

பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகிலுள்ள தேவனகொந்தி வரை எண்ணை குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது.

இதனால், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வேளாண் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்; பல்லாயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். இது குறித்து விவசாயிகள் தமிழக முதல்வரிடம் நேரில் முறையிட்டனர்.
தமிழக முதல்வர் வழி காட்டுதலின்படி, தொழில்துறை அமைச்சரைச் சந்தித்து, விவசாயிகள் விரிவாகப் பேசினர். ‘இது மத்திய அரசு திட்டம்; நாங்கள் எதுவும் செய்ய இயலாது’ என தொழில்துறை அமைச்சர், கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
அதன்பிறகு, பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் டெல்லிக்கு வந்தனர். அவர்களை, பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நான் அழைத்துச் சென்றேன். அவரிடம் முறையிட்டனர். அதன்பிறகு, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தற்போது, தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி, பாலக்கோடு ஆகிய இரு தாலூக்காக்களில், இந்தத் திட்டத்திற்கான நிலங்களை, மத்திய அரசே கையகப்படுத்தி, பாரத்பெட் ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு நிலம் கையகப்படுத்தி இருப்பது, கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்த நடவடிக்கையால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான, பா.ஜ.க. மோடி அரசின் நடவடிக்கைக்கு, தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது.
விளை நிலங்களில் எண்ணை குழாய் பதிப்பதைக் கைவிட்டு, வீண் பிடிவாதம் செய்யாமல், மாற்று வழிகளில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற கருத்தை, இரண்டு அரசுகளும் ஆய்வு செய்ய வேண்டும்; விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் வைகோ.

Exit mobile version