அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தல் இப்பொழுது நடைபெறும் இந்த தேர்தல் தான் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அதேபோல், காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இருவரும் வெற்றிபெறும் முனைப்பில் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகினற்றனர். மேலும், இந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் முக்கியான தேர்தலாகவும் கருதப்படுகிறது.
இந்தநிலையில், விளவங்காடு தொகுதியில் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூறியதாவது; மிழகத்தில் நடைபெறும் அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது என்றார்.மேலும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முதல்வர் வேட்பாளர் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் கன்னியாகுமரியில் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.