தாய்லாந்தை சேர்ந்த ஏழை மீனவர் ஒருவருக்கு அரியவகை ஆரஞ்சு நிற முத்து ஒன்று கிடைத்துள்ளது.
தாய்லாந்து:
தாய்லாந்தை சேர்ந்த ஏழை மீனவர் ஹட்ச்சை நியோமேடேசா(37) . இவர் தினமும் இவரது குடும்ப தொழிலான கிளிஞ்சல் ஓடுகளை நக்கோன் சி தம்மரத் மாகாணத்தில் சேகரிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார். வழக்கம் போல சில நாட்களுக்கு முன்னர் கிளிஞ்சல்களை சேகரித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அதன்பின்னர் அதை சுத்தப்படுத்திய போது நத்தையின் ஓட்டுக்குள் ஆரஞ்சு நிற முத்து ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து இதை பற்றி அறிவதற்காக அக்கம்பக்கத்தினரிடம் கேட்டபோது, “மேலோ மேலோ” என்ற பெரிய அளவிலான நத்தைகளிடம் இது காணப்படும் எனவும், ஆயிரத்தில் ஒரு கிளிஞ்சல் ஓடுகளில் காணப்படும் ஒரே ஒரு அரிதான பொருள் எனவும் தெரிந்துகொண்டார்.
Read more – IRCTC மூலம் இனி நாடுமுழுவதும் பயணிக்க பேருந்து முன்பதிவு.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு..
இந்த அரியவகை ஆரஞ்சு நிற முத்துவின் விலை இந்திய மதிப்பில் 25 லட்சம் இருக்கும் எனவும், இதனால் எனது குடும்ப சூழ்நிலை மாறிவிடும் என்று ஹட்ச்சை நியோமேடேசா மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.