கலிபோர்னியா உயிரியல் பூங்கா : 2 கொரில்லா குரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி

கலிபோர்னியா உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேக்ரமெண்டோ:

கடந்த 2019 ம் ஆண்டு சீனா நாட்டில் உருவெடுத்த கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி இன்று வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்களை குணப்படுத்த சமீபத்தில் அனைத்து நாடுகளும் தடுப்பூசியை அறிமுகப்படுத்தி வருகிறது.

மேலும், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை வைரஸானது சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்தும், இதன் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டிபிடித்துள்ளனர்.

Read more – வானில் வெடித்து சிதறிய இந்தோனேசிய விமானம் : ஜாவா கடலில் கண்டறியப்பட்ட விமானத்தின் பாகங்கள்

இந்தநிலையில், கலிபோர்னியா நாட்டில் உள்ள சேக்ரமெண்டோ உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 கொரில்லா குரங்கிற்கும் தொடர்ந்து இருமல் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மற்ற விலங்குகளிடம் இருந்து 2 கொரில்லாவையும் தனிமைப்படுத்தியதாகவும்,தற்போது எந்த பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் சேக்ரமெண்டோ உயிரியல் பூங்காநிறுவனம் தெரிவித்துள்ளது.

மனிதர்களுக்கு மட்டுமே பரவிய கொரோனா தொற்று இப்பொழுது கொரில்லாவிற்கும் பரவியதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version