பாகிஸ்தானில் 900 பேர் பலி… 1 கோடி பேர் வீடுகளை இழந்து தவிப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 900 பேர் உயிரிழந்துள்ளனர். 1 கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உள்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மார்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால் 1,293 பேர் காயமடைந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். 1.5 மில்லியனுக்கும் மேலான மண் வீடுகள் அழிக்கப்பட்டு விட்டன. ஆயிரங்கணக்கான மக்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உதவிக்காக காத்திருக்கின்றனர். இது பிரிவினைக்கான நேரம் அல்ல. நம் ஒற்றுமைக்கான நேரம் என்று தெரிவித்தார்.

Exit mobile version