சீனாவில் 2017 ம் ஆண்டு வௌவ்வாலிடம் கடி வாங்கிய ஆராய்ச்சி விஞ்ஞானி : உலகமுழுவதும் கொரோனா பரவியதற்கு இது தான் காரணமா?

சீனாவில் 2017 ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக ஒரு குகையில் வௌவ்வாலிடம் கடி வாங்கிய ஆராய்ச்சி விஞ்ஞானியின் தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

பிஜீங்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உலகமுழுவதும் பரவியது. இந்த வைரஸானது வௌவ்வால் அல்லது பாம்பின் மூலமாக உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய உலக சுகாதார அமைப்பின் குழுவினர் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான வுகான் நகரிலுள்ள ஒரு குகையில் கடந்த 2017 ம் ஆண்டு வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி வௌவ்வாலிடம் கடி வாங்கிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Read more – இன்றைய ராசிபலன் 18.01.2021!!!

2017-ம் ஆண்டு வௌவ்வால் பெண்மணி என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி தனது குழுவுடன் வுகானில் உள்ள அந்த குகைக்கு சென்று வௌவ்வாலை பிடித்து அதில் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது சியூ ஜியி என்ற ஆராய்ச்சியாளர் வௌவ்வாலை பிடித்து பரிசோதனை செய்த போது எதிர்பாராத விதமாக அந்த வௌவ்வால் இவரை கடித்துள்ளது. கையுறை அணிந்திருந்த போதும் வௌவ்வாலின் அந்த கடி ஊசி ஏத்தியது போல இருந்தது சியூ ஜியி தெரிவித்திருந்தார்.

தற்போது சியூ ஜியி வௌவ்வாலிடம் வாங்கிய கடியால் தான் உலகமுழுவதும் கொரோனா பரவியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version