மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டம்..

மியான்மரில் இன்னும் ஓராண்டிற்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மியான்மர் :

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால்,இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக மியான்மர் ராணுவம் குற்றம்சாட்டி அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மியான்மர் ராணுவத்தின் இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அதிபர் வின் மைன்ட் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்டோர் அந்நாட்டு ராணுவத்தின் அதிரடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, மியான்மரில் இன்னும் ஓராண்டிற்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

Read more – தாயை கொன்று எரித்த தீயில் கோழி கறி சமைத்து சாப்பிட்ட மகன் : ஜார்கண்டில் நடந்த கொடூர சம்பவம்

இதையடுத்து, மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட ராணுவத்திற்கு எதிராக அந்த நாடு உள்ள முழுவதும் உள்ள 30 நகரங்களில் சுமார் 70 மருத்துவனைகள் மற்றும் மருத்துவ துறையினர் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மியான்மர் சட்ட ஒத்துழையாமை இயக்கம் என்ற குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version