பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷபாஷ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

Pakistan PM

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதை தொடர்ந்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமராக பதவியேற்றுக் கொண்ட அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷெரீப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார். அதில், பயங்கரவாதம் இல்லாத, அமைதியான, நிலைத்தன்மை கொண்ட பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது. நமது இருநாடுகளுக்கான வளர்ச்சியினை கருத்தில் கொண்டு செயல்படுவோம். நம் இருநாட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவோம் என்று பிரதமர் மோடி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version