நேபாள வெள்ளத்தின் அடுத்த தாக்கம்; இந்தியாவுக்கான மின்சாரம் பாதியாகக் குறைவு!

இந்தியாவுக்கு மின்சாரம் வழங்கும் நீர்மின் நிலையங்களும் பாதிப்பு; 800 மெகாவாட்டிலிருந்து 400 மெகாவாட்டாக சரிவு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அங்குள்ள நீர்மின் நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தின் அளவு பாதியாகக் குறைந்துள்ளது.

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு சுமார் 800 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது குறைந்தபட்சம் 400 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளதாக இந்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு மின்சாரம் வழங்கி வந்த 14 மெகாவாட் திறன் கொண்ட தேவிகாட் நீர்மின் நிலையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

Grid India தரவுகளின்படி, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெள்ளம் ஏற்பட்டபோது உச்ச நேரத்தில் நேபாளத்திலிருந்து இந்தியா 963.4 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்திருந்தது. நேபாள எரிசக்தி அமைச்சகத்தின் தகவலின்படி, சுமார் 13 நீர்மின் நிலையங்கள் மற்றும் ஒரு சூரிய மின் நிலையம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களின் முழுமையான அளவை அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர்.

Exit mobile version