அமெரிக்காவில் அரங்கேறிய கொடூர சம்பவம் : கர்ப்பிணி உள்பட 5 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் ஒரே வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் கர்ப்பிணி உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இண்டியானா :

அமெரிக்கா இண்டியானா போல்ஸ் நகரில் அதிகாலை 4 மணிக்கு ஒரு வீட்டில் இருந்து பயங்கரமான துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்படி விரைந்து சென்று பார்த்தபோது அங்கு கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். மேலும் அந்த கர்ப்பிணிப் பெண் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாக மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இண்டியானா போல்ஸ் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more – ஒரு இரவு காத்திருங்கள் என் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள் : பெற்ற மகள் இருவரை மூடநம்பிக்கையால் பலிகொடுத்த பெற்றோர்கள்

இந்த நிகழ்வு தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில், இதுகுறித்து மாநகர மேயர் ஜோ ஹாக்செட் அளித்த செய்திக்குறிப்பில் இது பெரும் மாநகர படுகொலை என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version