தங்கம் விலை அதிரடி உயர்வு… சாமானியனுக்கு எட்டாக் கனியாகுமா தங்கம்?

தங்கம் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கொரோனா கால பொதுமுடக்கத்தின் போது உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை நவம்பர் மாதம் தொடங்கியதும் குறைந்தது. இதற்கு பொருளாதார நிலையற்ற சூழலில் பெரும் பணக்காரர்கள் தங்கத்தில் முதலீடு செய்ததே காரணமாக கூறப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அது நீடிக்கவில்லை. வழக்கம் போலவே விலை உயர்வு நீடிக்கிறது. தீபாவளி சமயத்தில் தங்கம் விலை உயர்த்தப்படுவது வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

சென்னையில் இன்று (நவம்பர் 6) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,541 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,505 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 288 ரூபாய் உயர்ந்து 36,328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில பொருளாதார வல்லுநர்களோ தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 4,869 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,905 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 38,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 288 ரூபாய் உயர்ந்து 39,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.68.60 ஆக இருந்தது. இன்று அது ரூ.68.70 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Exit mobile version