நேபாள பெருவெள்ளம்: 21 தமிழர்கள் பாதுகாப்பு; 36 பேரின் நிலை என்ன?

கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற 57 பேர் கொண்ட குழுவில் எஞ்சியவர்களை கண்டறியும் பணி தீவிரம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த கைலாஷ் மானசரோவர் யாத்திரிகர்களை கண்டறியும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றிருந்தனர்.

இந்தக் குழுவைச் சேர்ந்த 21 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், எஞ்சிய 36 பேரின் நிலை குறித்த தகவல் கிடைக்கவில்லை என சுற்றுலா நிறுவனத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த யாத்திரைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சாலை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருப்பது மீட்பு மற்றும் தகவல் தொடர்புப் பணிகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை கண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Exit mobile version