தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி. வெங்கடேசன் காலமானார். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவிவகித்தவர் பீலா ராஜேஷ். தற்போது வணிகவரித்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வரும் அவர், கிருஷ்ணகிரி கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது தந்தை வெங்கடேசன் தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி. ஆவார். அவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும்.இவரது மனைவி ராணி வெங்கடேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சாத்தான்குளம் MLA ஆவார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.




