Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் 2021-22-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை – முதலமைச்சர் அறிவிப்பு

August 24, 2020
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 3,250 இடங்களுடன், புதியதாக அமைய உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து, வரும் 2021-22-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இணைய வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 17-ல் இருந்து 16 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில் 2030-இல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை, நாம் எடுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளால் இப்போதே அடைந்து விட்டதும் சாதனை. டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது இந்த திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது.

கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் 20% அதிகரிப்பு – அமைச்சர்

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை, 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது.

வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், தரமான மருத்துவ சிகிச்சையைக் குறைந்த செலவில் பெறுவதற்காக, பலரும் தமிழ்நாட்டிற்கு வருவதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை நனவாக்கியது அரசு.

அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என அரசு கொள்கை முடிவு எடுத்தது.

அதனடிப்படையில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிலுள்ள 3250 மருத்துவப் படிப்பு இடங்களுடன், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 1650 புதிய மருத்துவ பட்டப்படிப்பு இடங்களை சேர்த்து 2021-22 ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையால், குணமடைந்து இல்லம் திரும்புவோரின் சதவிகிதம் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உயிர் இழப்போரின் சதவிகிதமும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு. மருத்துவத்துறையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள அனைத்து நவீன சிகிச்சைகளும், தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நவீன வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி வருவதால், அதிக அளவில் நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள் என அவர் பேசினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அந்த மனசு தான் சார் கடவுள்..மீனை காப்பாற்ற முயற்சிக்கும் பன்றிக் குட்டிகள்

Next Post

அஜீத் நடிக்க இருந்த படத்தில் கதாநாயனாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்…

Next Post

அஜீத் நடிக்க இருந்த படத்தில் கதாநாயனாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version