Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

எச்.வசந்தகுமார் மறைவு தமிழகத்திற்கே பேரிழப்பு அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

August 28, 2020

கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமாரின் மறைவு தமிழகத்திற்கே பேரிழப்பாகும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி எம்.பி.யும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் இன்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் :-

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்குத் தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

கொரோனா அவரை நம்மிடமிருந்து அநியாயமாகப் பிரித்துச் சென்றது அதிர்ச்சியளிக்கிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். அவரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:-

எச்.வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனும் செய்தி அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. அவரது பிரிவினால் மீளாத்துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தாருக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் அனுதாபங்களையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி :-

எச்.வசந்தகுமார் காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பாகும். இளமை பருவம் முதல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்டவர். மக்கள் நலப்பணியில் ஈடுபட்டதன் விளைவாக கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறார். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் :-

கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்த்குமார் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அவரின் மறைவுக்கும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குமரி அனந்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் :-

எச்.வசந்தகுமார் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் :-

தொழிலதிபரும், மக்களவை உறுப்பினருமான வசந்த் குமார் காலமானார் என்பது பேரதிர்ச்சியும் பெருங்கவலையும் அளிக்கிறது. சந்திக்கும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கமளிப்பவர் எச்.வசந்தகுமார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பு ஆகியவற்றின் அடையாளம். வெற்றிவீரருக்கு எமது வீரவணக்கம்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் :-

எச். வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மறைந்தது அதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அவரது மறைவு சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் :-

எச்.வசந்தகுமார் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது.

உழைப்பால் உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு உகந்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன்:-

எச்.வசந்தகுமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.

திருநாவுக்கரசர் எம்.பி. :-

எச். வசந்தகுமார் இயற்கை எய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், மன வருத்தமும் தருகிறது. அவரது அகால மரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், மகன்கள் மற்றும் குடும்பத்தினர், அவரது சகோதரர் குமரி அனந்தன் உட்பட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்:

நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சபரிமலையை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம்..ஏழுமலையானுக்கு வந்த சோதனை

Next Post

சன்னி லியோனுக்கு மெரிட் லிஸ்டில் முதலிடம்..எவன் பார்த்த வேலைனு தெரியல?..

Next Post

சன்னி லியோனுக்கு மெரிட் லிஸ்டில் முதலிடம்..எவன் பார்த்த வேலைனு தெரியல?..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version