ஷங்கர், ராஜமௌலி போன்ற சினிமா ஜாம்பவான்கள் பண்ணாத முயற்சியை செய்யும் புதுமுகங்கள்!!!

ஷங்கர், ராஜமௌலி போன்ற சினிமா ஜாம்பவான்கள் பண்ணாத முயற்சியை செய்யும் புதுமுகங்கள்!!!
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்ய பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சி எடுக்கின்றனர், ஆனால் vfx என அளிக்கப்படும் விசுவல் எபெக்ட் ஹாலிவுட் படம்தான் முன்னோடியாக உள்ளது.

அதனால் தான் தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களை அதிக பேர் ரசிக்க காரணம்.இதில் சிறிது தவறு ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டு செய்த அந்த காட்சி கார்ட்டூன் போல ஆகிவிடும் அதனால்தான் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய படங்கள் உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த தரத்தில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய ‘ஜதுரா’ என்னும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது.

முழுக்க தமிழ்மொழியில் உருவாகும் இந்தப்படம், இந்தியாவில் முதல் முறையாக ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் விர்சுவல் புரொடக்‌ஷன் முறையில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்திலும், தரத்திலும்,இந்திய திரைத்துறை அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான விஷயமாகும். இது வருங்கால இந்திய சினிமாவின் முதல் முயற்சி.

“ஜதுரா” படத்தை சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் என்பவர் தயாரித்து வருகிறார். ஆர்.ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குனராக பெமில் ரோஜர் பணியாற்றுகிறார். ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் விரைவில் நடிகர்களின் பட்டியலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *