கொரோனா ஊரடங்கு காலத்தில் பல திரைப்பட பிரபலங்களின் திருமணங்கள் நடைபெறும் நிலையில் பிரபல காமெடி நடிகை வித்யுலேகா திருமண நிச்சயதார்த்தமும் சஞ்சய் என்பவருடன் நடந்துள்ளது.
சென்னை:
பிரபல காமெடி நடிகை வித்யுலேகா ராமன். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.அதை தொடர்ந்து இதேபடம் நானி நடிப்பில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.அதிலும் சமந்தாவிற்கு தோழியாக வித்யுலேகா தெலுங்கிலும் அறிமுகம் ஆனார்.தொடர்ந்து சுந்தர் .சி இயக்கத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு,அஜித்தின் வீரம்,விஜய்யின் ஜில்லா,உள்பட பல முன்னணி கதாநாயகர்களின் படங்களின் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவரும் இவர் சமூக வலைதளைங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.சமீபத்தில் உடல் எடை குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் திகைக்கவைத்து அந்த அனுபவம் மற்றும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.இந்நிலையில் தனக்கு தற்போது சஞ்சய் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும்,சமூக இடைவெளியுடனும் மாஸ்க் அணிந்து தான் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து,திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.நடிகை ரெஜினா,ஜனனி ஐயர்,ராஷி கண்ணா உள்பட பலபேர் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தையும் வைரலாகி வருகின்றனர்.