ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, டிசம்பர் 15-ம்தேதி முதல் ஆன்லைனில் நடக்க உள்ளது.
ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் கரணமாக அந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. உதவி லோகோ – பைலட் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்ததால் தேர்வானவர்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வி.கே. யாதவ், டெல்லியில் நேற்று காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்:
ரயில்வேயில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 640 பணி இடங்களை நிரப்புவதற்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கும் என்றார்.
இந்த தேர்வுக்காக 2 கோடியே 42 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை முடிந்து விட்டது. தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்வு தேதிகள் முழுமையாக விரைவில் அறிவிக்கப்படும்.
உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நிச்சயமாக வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
கொரோனா வைரஸ் பரவலால்தான் அவர்களை வேலையில் சேர்ப்பதில் தாமதமாகி விட்டது. ஏனெனில் அவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க வேண்டியதிருக்கிறது. என குறிப்பிட்டார்.
வரும் 12-ந் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு 10ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிற ரயில்களுடன் இந்த ரயில்கள் கூடுதலாக இயங்கும்.
தேர்வுகள் உள்ளிட்ட நோக்கங்களுக்காக மாநிலங்களிடம் இருந்து கோரிக்கை வரும்போதெல்லாம் ரயில்களை இயக்குவோம்.
புல்லட் ரயில் திட்டம் சிறப்பாக முன்னேறி வருகிறது. ஆனால் அது முடிவு அடைவதற்கான உண்மையான கால அளவை அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்குள் கூற முடியும், அப்போதுதான் நிலம் கையகப்படுத்தும் நிலை கண்டறியப்படும். அதற்கான வடிமைப்புகள் தயாராக உள்ளன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் டெண்டர்கள், நிலம் எடுத்தல் தாமதமானது என்பது உண்மைதான். தற்போது கொரோனா வைரஸ் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதால் நிலம் எடுக்கும் பணியை தொடங்க முடியும், என் வி.கே. யாதவ் கூறினார்.