மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி வரியே காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி :
புரிந்துகொள்ள கடினமான வரி ஜி.எஸ்.டி. என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரலாறு காணாத சரிவுக்கு முக்கிய காரணம் மோடி அரசாங்கத்தின் ஜி.எஸ்.டி.யாகும்.இளைஞர்களின் எதிர்காலம்,மில்லியன் கணக்கான வேலைகள்,மில்லியன் கணக்கான சிறு வணிகங்கள், மற்றும் மாநிலங்களின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், கடினமான புரிந்துகொள்ள முடியாத வரி ஜி.எஸ்.டி. 4 விதமான வரிவிதிப்பு, 28 சதவீதம் வரை வரி விதிப்பு போன்றவை அமைப்பு சாரா பொருளாதாரத்தின் மீது நடந்த 2 வது மிகப்பெரிய தாக்குதல்.மேலும் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.




