இன்று சனிக்கிழமை தேதி 12.09.2020, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் பிற்பகல் 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்
இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.உங்கள் நடவடிக்கைகளில் கவனம் தேவை.இன்று உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
இன்று பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வேலைகளை திட்டமிடுவது இன்று முக்கியம்
மிதுனம்
இன்று சாதகமான நாளாக அமையும்.உங்களின் முயற்சி சிறியதாக இருந்தாலும் அதிக வெற்றி காண்பீர்கள்.உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்..
கடகம்
இன்று முற்போக்கான வளர்ச்சிகள் ஏற்படும் நாள். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்க நேரிடலாம். அதன் மூலம் பல வெற்றிகளை பெறலாம்.
சிம்மம்
கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மிகக் காரியங்கள் இன்று உங்களுக்கு மன நிம்மதியை தரலாம். முக்கிய முடிவுகள் இன்று எடுக்கலாம்.
கன்னி
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும் . இஷ்ட தெய்வங்களை வணங்குதல் மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன்மூலம் உங்கள் கவலைகளை நீங்கள் மறக்கலாம்
துலாம்
இன்று அனுகூலமான நாளாக அமையும். இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இன்று பணியில் சவால்களும் போட்டிகளும் நிறைந்து காணப்படும்.இந்த சவால்களை திறமையாக சமாளிக்க வேண்டிய நிலை காணப்படும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் பயணங்கள்மேற்கொள்ளலாம். புதிய முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
தனுசு
இன்று தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் வெற்றிகரமான பல பலன்களைக் பெறுவீர்கள். அதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்குவீர்கள். உங்கள் வாழ்க்கை தரத்ததை உயர்த்துவீர்கள்
மகரம்
இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாளாகும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
கும்பம்
கடினமான பணிகளைக் கூட இன்று நீங்கள் விரைவில் முடிப்பீர்கள். நீங்கள் பணிகளை திறம்பட கையாண்டு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
மீனம்
இன்று உங்கள் திறமைகள் நன்கு புரிந்து கொள்ளப்படும் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வதில் நீங்கள் சாமர்த்திய சாளியாக இருப்பீர்கள் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.




