வடிவேல் பாலாஜி யாருனே தெரியாது – வனிதா பரபரப்பு…

வடிவேல் பாலாஜி யாருனே தெரியாது – வனிதா பரபரப்பு…
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியை யாரென்று தனக்கு தெரியவே தெரியாது என்று கூறிய நடிகை வனிதாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் காலமானார். 42 வயது நடிகரின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி, குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தார். அதேபோல் நடிகர் சிவ கார்த்திகேயன் அவரது பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா விஜயக்குமார் வடிவேல் பாலாஜியை தனக்கு யாரென்று தெரியாது என டிவிட்டியுள்ளார்.

அதாவது, என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை… அவர் யார் என்றே எனக்கு தெரியாது. நான் பார்த்ததும் கிடையாது.. அவருடன் பணிபுரிந்ததும் கிடையாது. அவர் திறமைசாலி என கேள்விபடுகிறேன். இப்படி ஒன்றை நினைத்துக்கூட பார்க்காத அவரின் குடும்பத்திற்கு என்னுடைய எண்ணமெல்லாம் செல்கிறது என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் மத்த சேனலில் உள்ளவர்களுக்கு எல்லாம் வடிவேல் பாலாஜி பற்றி தெரிந்திருக்கிறது. உங்களுக்கு தெரியவில்லையா என்று விளாசியிருக்கின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், அவருக்கு தெரிந்ததெல்லாம் விஜய் அஜித் மட்டும்தான். வேலை செய்றது விஜய் டிவிலதான் ஆனா தெரியாது போல என சாடியிருக்கின்றனர்.

அதனால் ஆவேசப்பட்ட வனிதா, இந்த கருத்தை கூறிய குறிப்பிட்ட நெட்டிசன் வெளுத்து வாங்கியுள்ளார். நீங்கள் அதைப்பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை. குக்கு வித் கோமாளிதான் முதல் சீசன், அது புதிய அனுபவம். நான் வெற்றி பெற்றேன், அது என்னுடைய தொழில், ஜட்ஜ்மென்ட் செய்வதற்கு பழைய எபிசோடுகளை பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நான் பட அனுபவமுள்ள பார்வையாளர். ஒரு மனிதர் இறந்து போயுள்ளார். புதிய சர்ச்சையை கிளப்பாதீர்கள், அவரது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *