Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மெர்சல் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாள் ஸ்பெஷல்: அட்லீயின் அசத்தல் படங்கள் ஒரு பார்வை

September 21, 2020

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து இன்று இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து திரைப்படம் இயக்கப்போகும் வெற்றி இயக்குனர் அட்லீ இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இயக்குனர் ஷங்கரின் நண்பன் மற்றும் ரோபோ திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா என்னும் இளமை பட்டாளங்களை வைத்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு உணவு வழங்கிய வழக்கறிஞர் B.தனசேகர்

அட்லீயின் பேபி ஜான்

மஞ்சு வாரியரின் மனம் லயிக்கும் போட்டோஸ்

திருமணத்திற்கு பிறகான காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அழகான காதல் கவிதையாகவே இருந்தது. பெற்றோர்களுக்காக விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஜான் – ரெஜினாவாக ஆர்யா நயன்தாரா அவர்களுக்குள் இருக்கும் பசுமையான நினைவுகளாக இருக்கும் காதலன் காதலி சூர்யா – கீர்த்தனா.

ஜெய் – நஸ்ரியா கேரக்ட்டர்கள் சில நிமிடங்கள் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இன்றும் அழியா நினைவுகளாகவே உள்ளது. சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நயன்தாராவுக்கு இந்த திரைப்படம் தான் ரீ என்ட்ரி. சிறந்த வசனத்திற்காக மாநில விருதும், சிறந்த புதுமுக இயக்குனருக்கான எடிசன் விருதும் இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

இன்றும் தொலைக்காட்சியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்படும் போது அதை கேலி செய்தாலும் முழு திரைப்படத்தையும் பார்த்து முடிக்கும் நம்மை போல் ரசிகர்கள் தான் அட்லீயின் முதல் வெற்றிக்கான காரணம்.

தளபதியுடன் அட்லீயின் ஹாட்ரிக் வெற்றி:

தளபதி விஜய், அட்லீக்கு கொடுத்த வாய்ப்பு இனி வரும் இளம் இயக்குனர்களுக்கு யாரும் கொடுப்பார்களா என தெரியவில்லை. இவர்கள் கூட்டணியில் வந்த மூன்று படங்களுமே ரசிகர்களை தெறிக்கவிட்டு, மெர்சலாக்கி, பிகில் அடிக்க வைத்தது.

2016 ஆம் ஆண்டு முதன் முதலாக தளபதி விஜய் அட்லீயின் கூட்டணியில் தெறி படம் வந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திடாத மிடுக்கான போலீஸ் அதிகாரியாக விஜய், அழகு தேவதைகளாக சமந்தா – ஏமிஜாக்சன், வில்லனாக இயக்குனர் மகேந்திரன், விஜய்யின் அம்மாவாக ராதிகா, மகளாக நைனிகா, என தியேட்டரை தெறிக்கவிட்டது திரைப்படம். சிறந்த இயக்குனருக்கான SIIMA விருதையும், IIFA உட்சவம் விருதையும் பெற்றது தெறி திரைப்படம்.

இதுவரை தமிழ் சினிமாவில் அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் விதிமுறைகளையும் மறைமுகமாகவே விமர்சித்து வந்து கொண்டிருந்த நிலையில், தளபதியின் மெர்சல் மற்றும் சர்க்கார் நேரிடையாகவே விமர்சனங்களை கொண்டு வந்தது.

இதில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் இதுவரை யாரும் எடுத்து பேசிடாத துறை, மருத்துவ துறையை பற்றி நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அன்றைய நிலையில் அமலாக்கப்பட்டிருந்த GST பற்றி நேரிடையாக விமர்சித்தது.

ஆளப்போறன் தமிழன் பாடல் உலகமெங்கும் அதிர்ந்து பல சாதனைகளை படைத்தது. பல எதிர்ப்புகளை தாண்டி படம் திரையிடப்பட்டு வெற்றி கண்டது. இந்த திரைப்படத்திற்கும் சிறந்த இயக்குனருக்கான விஜய் அவார்ட் விருதையும், SIIMA விருதையும் அட்லீ பெற்றார்.

பெண்களுக்கான கால்பந்து போட்டியை மையமாக வைத்து2019 ஆம் ஆண்டு அட்லீ – விஜய் கூட்டணியில் பிகில் திரைப்படம் வெளிவந்தது. பிகில் திரைப்படத்திற்கு மேலாக பேசப்பட்டது பிகில் இசை வெளியிட்டு விழா தான். தளபதி மற்றும் அட்லீயின் பேச்சுக்கள் அனல் தெறித்தது. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களிலேயே சில நாட்களாக நடித்து கொண்டிருந்த நயன்தாரா சற்று அதிலிருந்து விலகி விஜயுடன் கைகோர்த்தார். தெறி, மெர்சல் வரிசையில் பிகிலும் பட்டை கிளப்பியது. சிங்கப்பெண் பாடல் ஆளப்போறன் தமிழன் பாடலுக்கு ஈடு கொடுத்து ஹிட் அடித்தது.

அட்லீ எடுத்த நான்கு படங்களுமே அடுத்தடுத்து ஹிட் அடித்து அவரை வெற்றி இயக்குனர் வரிசையில் அட்லீயை அமர்த்தியது.

இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்க்கான் தனது 54 வது பிறந்தநாள் அன்று தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். மொத்த இந்திய சினிமா உலகமே அட்லீ யாரென்று திரும்பி பார்த்தது, ஆம் ஏனென்றால் இம்முறை ஷாரூக்கின் அடுத்த திரைப்படம் பாலிவுட்டில் இல்லை, நம்ம கோலிவுட்டில் நம் மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில். இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறகு ஷாருக்கானை வைத்து இயக்க போகும் தமிழ் இயக்குனர் நம் பிறந்தநாள் நாயகன் அட்லீ தான்!

ஒருவனின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் வருகிறது என்றாலே அவன் வெற்றிபடிக்கட்டில் ஏறிக்கொண்டிருக்கிறான் என்றே அர்த்தம். அது அட்லீயின் விஷயத்தில் உண்மை அட்லீயின் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஆனால் விமர்சகர்களால் அவர் வெற்றியை என்ன அவர் முகத்தில் இருக்கும் வசீகரமான சிரிப்பை கூட மாற்ற முடியவில்லை. அவரது திரைக்கதைகள், திருமணவாழ்கை, நிறம் என எவ்வளவு அடிமட்டத்திற்கு சென்று விமர்சித்தாலும் அத்தனை மீம்ஸ்களையும் கீழே போட்டு அதன் மீது ஏறி வெற்றி கோட்டையை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் நம் இயக்குனர் அட்லீக்கு செய்திஅலையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள்; தொடங்கி வைத்தார் முதல்வர்

Next Post

தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வம்…

Next Post

தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version