மும்பை இந்தியன்ஸ் எதிரான சூப்பர் ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன் பிறகு களம் இறங்கிய பெங்களூர் அணி 201 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு 202 ரன்கள் இலக்காக கொடுத்தது.மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் தொடக்கம் தர,முதல் ஓவரில் 6 அடித்து ரோஹித் ரன் எண்ணிக்கையை தொடங்க,அடுத்த ஓவரே வாஷிங்டன் சுந்தர் பந்தில் ரோஹித் சர்மா(8 ரன்கள்,8 பந்துகள்) நெகியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அதன்பிறகு வந்த சூர்யா குமார் யாதவ் ரன்கள் எதுவும் மின்றி உடானா பந்தில் நடையை கட்ட,மிக நீண்ட நாட்கள் பிறகு களம் இறங்கிய இஷான் கிஷன் வந்த முதல் பந்தே பௌண்டரி அடித்து அசத்தினார்.4 வது ஓவர் வாஷிங்டன் சுந்தர் 1 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்த,அடுத்த ஓவரே சைனி பந்தில் கிஷன் அட்டகாசமாய் ஒரு சிக்ஸ் அடித்தார்
6 ஓவர் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து தடுமாறியது.சஹால் வீசிய 6.4 வது ஓவரில் டி காக் (14 ரன்கள்,15 பந்துகள்) நெகியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்து களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா அவர் பாணியில் ஆடம் ஜாம்பா ஓவரில் ஒரு சிக்ஸர் அடிக்க,9 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து இருந்தது.வாஷின்டன் சுந்தர் போட்ட 4 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறந்த பௌலிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.சைனி வீசிய 11 வது ஓவரில் கிஷன் 2 சிக்ஸர்கள் அடித்து மும்பை அணிக்கு நம்பிக்கை கொடுக்க,அடுத்த ஓவர் ஜாம்பா பந்தில் ஹர்திக் பாண்டியா (15 ரன்கள்,13 பந்துகள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். 13 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து இருந்தது.மறுமுனையில் கிஷன் நிலைத்து நின்று ஆடி 39 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.தொடர்ந்து அதிரடி காட்டிய கிஷன் சஹால் பந்தில் சிக்ஸர் அடித்து மும்பை அணி 100 ரன்கள் கடக்க உதவி செய்ய,அதே ஓவரில் பொல்லார்ட் ஒரு பௌண்டரி ஓட விட்டார்.24 பந்துகளில் 80 ரன்கள் மும்பைக்கு தேவை என்ற நிலையில் பொல்லார்ட் ஜாம்பா பந்தில் ஒரு பௌண்டரி,3 சிக்ஸர்கள் அடித்து தெறிக்க விட்டார்.தொடர்ந்து இருவரும் சிக்ஸர்களை பறக்க விட,பொல்லார்ட் அரை சதத்தை கடந்தார்.
மும்பை அணிக்கு 12 பந்துகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே இப்பொழுது தேவையாக இருக்க,சைனி ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார்.கடைசி ஓவரில் 19 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் பொல்லார்ட் முதல் பந்தில் 2 ரன்கள் ஓடினார்.அடுத்த பந்து 1 ரன் எடுக்க,கிஷன் அடுத்த பந்தில் 2 சிக்ஸர் அடித்து நொறுக்கினார்.அடுத்த பந்து கிஷன் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து (99 ரன்கள்,58 பந்துகள்) வெளியேற,மும்பை அணிக்கு 1 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்ட் ஒரு பௌண்டரி அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.பொல்லார்ட் 24 பந்துகளில் 60 ரன்களுடன் களத்தில் இருந்தார்.இரு அணிகளும் 202 ரன்கள் அடித்து சமன் நிலையில் இருக்க சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது இரு அணிகளுக்கும்.

சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில் மும்பை அணி சார்பில் ஹர்திக், பொல்லார்ட் இறங்கினர். பெங்களூர் அணி சார்பில் பந்து வீசியது சைனி
முதல் பந்து: 1 ரன் பொல்லார்ட்
2 வது பந்து :1 ரன் ஹர்திக்
3 வது பந்து :0
4 வது பந்து :4 ரன் பொல்லார்ட்
5 வது பந்து :பொல்லார்ட் அவுட்
6 வது பந்து : 1 ரன்
8 ரன்கள் 6 பந்தில் தேவை என்ற நிலையில் பெங்களூர் அணி சார்பாக டிவில்லியர்ஸ்,விராட் கோலி இறங்கினர்.மும்பை அணி சார்பில் பும்ரா பந்து வீசினார்.
முதல் பந்து:1 ரன் டிவில்லியர்ஸ்
2 வது பந்து :1 ரன் விராட் கோலி
3 வது பந்து:0
4 வது பந்து:4 ரன் டிவில்லியர்ஸ்
5 வது பந்து:1 ரன் டிவில்லியர்ஸ்
6 வது பந்து:4 ரன் விராட் கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி.பெங்களூர் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த டிவில்லியர்ஸ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.




