பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள்: விறுவிறுப்பாகத் தொடர்கிறது!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள்: விறுவிறுப்பாகத் தொடர்கிறது!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா வெளியேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-4, 4-6, 6-4 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 30ஆவது இடத்தில் இருந்த டுனீசியாவின் ஒனஸ் ஜாபரை வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருந்த ஸ்விடோலினா காலிறுதியில் ஆர்ஜெண்டீனாவின் நாடியா பொடொராஸ்காவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினாவுக்கு கடுமையாகப் போட்டி போட்டார் நாடியா. ஸ்விடோலினா ஒரு செட்டைக் கூட கைப்பற்ற முடியாதபடி செய்த நாடியா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் ஸ்விடோலினா தோல்வியை சந்திப்பது இது 3ஆவது முறை.

உலகின் முதல் 20 நிலைக்கு உள்ளாக இருக்கும் வீராங்கனை ஒருவரை நாடியா எதிர்கொண்டது இதுவே முதல் முறையாகும். உலகின் 131ஆம் நிலையில் உள்ள அவர், பிரெஞ்சு ஓபன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் தகுதிச்சுற்று வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது நாடியா தனது அரையிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக் அல்லது இத்தாலியின் மார்டினா டிரெவிசான் ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்கிறார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-4, 4-6, 6-4 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 30ஆவது இடத்தில் இருந்த டுனீசியாவின் ஒனஸ் ஜாபரை வீழ்த்தினார். இதையடுத்து காலின்ஸ் தனது அரையிறுதியில் சக நாட்டவரான சோஃபியா கெனின்ûஸ எதிர்கொள்கிறார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா அரையிறுதிக்கு முன்னேறினார். அந்தச்சுற்றில் அவர் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

போட்டித்தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கும் பாப்லோ காலிறுதியில் 6-2, 7-5, 6-2 என்ற செட்களில் ஜெர்மனியின் டேனியல் அல்ட்மைரை வீழ்த்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *