Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கல் விவகாரம்: 2ஆவது பட்டியல் கிடைத்துவிட்டது!

October 10, 2020
சுவிஸ் வங்கியில் ரகசியமாக பணம் குவித்த இந்தியர்களின் 2-வது பட்டியல், மத்திய அரசின் கைக்கு கிடைத்துள்ளது.

சுவிஸ் நாட்டின் எப்.டி.ஏ. என்று அழைக்கப்படுகிற பெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் தொடர்பில் உள்ளன. இதனால், ஏ.இ.ஓ.ஐ. என்னும் தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பின்கீழ் இந்த நாடுகள், சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்து வைத்திருக்கிற தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய தகவல்களைப் பெற முடியும்.

கடந்த ஆண்டு 75 நாடுகள், சுவிஸ் நாட்டின் பெடரல் வரி நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்த சுவிஸ் வங்கி கணக்கு ரகசியத் தகவல்கள் பெற்றன. அந்த வகையில் இந்தியாவும் அங்கு பணம் குவித்துள்ள தனிநபர்கள், நிறுவனங்களின் முதல் பட்டியலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றது.

ஊசி போட்டு சம்பாதிச்ச பணமா இவ்வளவும்? பார்ப்போரை வாய் பிளக்க வைத்த ஒற்றை பீரோ!!

ஆன்லைன் ரம்மி விளையாடி 10 லட்சத்தினை இழந்த இளைஞர்… பெற்றோருக்கு தெரிய வந்ததால் நடந்த விபரீதம்!!

அடிதூள்… இனி இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கும்… மத்திய அரசு அதிரடி!

அதே போன்று தற்போது சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியிருப்போரின் 2-வது பட்டியலை மத்திய அரசு பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி தகவல்களை பெற்றுள்ள 86 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இது தொடர்பாக பெடரல் வரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ந்த ஆண்டு 86 நாடுகளுடன் தொடர்புடைய 30 லட்சம் நிதி கணக்கு விவரங்களை பெடரல் வரி நிர்வாகம் பகிர்ந்து கொண்டுள்ளது, இதில் இந்தியாவிலும் கணிசமான எண்ணிக்கையில் தனிநபர்களும், நிறுவனங்களும் பணத்தை குவித்து வைத்திருப்பது பற்றிய தகவல்களும் அடங்கும் என குறிப்பிட்டனர்.

மேலும், கடந்த ஓராண்டில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட நிதி மோசடிகளில் சம்மந்தப்பட்ட வழக்குகளின் நிர்வாக உதவிக்கு மத்திய அரசு தகவல்கள் கோரியபோது 100-க்கும் மேற்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்களை சுவிஸ் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

இவற்றில், சில பனாமா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேமேன் தீவுகள் போன்றவற்றில் இந்தியர்களால் அமைக்கப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடையவை என்றும் தனிப்பட்ட நபர்களை பொறுத்தமட்டில் அவர்கள் பெரும்பாலும் தொழில் அதிபர்களும், ஒரு சில அரசியல்வாதிகளும்தான் என கூறப்படுகிறது.

சுவிஸ் அதிகாரிகள் பகிர்ந்துள்ள தகவல்களில் வங்கி கணக்கு எண், நிதி பரிமாற்ற தகவல்கள், நபர் அல்லது நிறுவனத்தின் பெயர், வரி அடையாள எண், கணக்கில் இருப்பு வைத்துள்ள தொகை, மூலதன வருமானம் போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல்கள் அடிப்படையில், சம்மந்தப்பட்ட நபர்கள் தங்கள் வருமான வரி கணக்கு தாக்கலில் இதுபற்றி தெரிவித்திருக்கிறார்களா என்று வருமான வரி அதிகாரிகள் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் அடி சறுக்கல் : டெல்லி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

Next Post

ஜெயலலிதா மரண விவகாரம்: அப்போலோ மருத்துவமனை குற்றச்சாட்டு!

Next Post

ஜெயலலிதா மரண விவகாரம்: அப்போலோ மருத்துவமனை குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version