ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு குறைக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஏற்கனவே இருந்த ஒன்று, பின்பு ஆசிரியர் அமைப்பின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த வயது வரம்பு 1990ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த வயது வரம்பு 40ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர் அமைப்பினரும் பல்வேறு அரசியல் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினும் இதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்திருப்பதாவது,
ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பினை நீக்க வேண்டும் எனவும், இது பள்ளிகல்வித்துறையை சீரழிப்பதுடன் வேலைவாய்ப்பை பறிக்கும் என கூறியுள்ளார் மேலும், ஆசிரியர் வேலை கிடைக்காமல் திண்டாடும் 10 இலட்சம் பேரின் எதிர்காலம் இருளில் மூழ்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.




