Friday, March 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

October 14, 2020
மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்டோர்) பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு, அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
highcourt

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதில் தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி, கூடுதல் தலைமை வக்கீல் பாலாஜி, ஸ்ரீனிவாசன், யோகேஷ் கண்ணா ஆகியோர் ஆஜராகி, ’தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்’ என வாதிட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

சமூக நீதிக்கு எதிரான திராவிட மாடல் அரசு – அன்புமணி கண்டனம்!

10.5 % இட ஒதுக்கீட்டு மதுரை உயர்நீதிமன்ற தடை உத்தரவு தொடரும்… டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு!!

அப்போது நீதிபதிகள், ‘சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட கமிட்டியின் நிலை என்ன?, நடப்பு ஆண்டில் அமல்படுத்தக்கூடாது என்பதில் ஐகோர்ட்டின் உத்தரவு தெளிவாக உள்ளதே’ என்று கேட்டனர்.

இதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, ‘தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக் கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த முடியும்’ என வாதிட்டார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங், ‘ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட கமிட்டியின் கூட்டத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக அரசு அதிகாரிகள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’ என வாதிட்டார்.

கேவியட் மனுதாரர் டி.ஜி. பாபு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட கமிட்டி இதுநாள் வரை ஒரு முடிவையும் எடுக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் மாணவர்களை அலையவிட்டு மத்திய அரசும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அமைதி காத்து வருகிறது. இந்த வழக்குக்கும், கமிட்டிக்கும், 50 சதவீத இடஒதுக்கீடுக்கும் குந்தகம் விளைவிக்காமல் நடப்பு ஆண்டே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைய மத்திய அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஓ.பி.சி. மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என வாதிட்டார்.

இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான கவுரவ் சர்மா, ‘மருத்துவ கல்லூரிகளில் இடங்களை அதிகரித்துள்ளதால், அதையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது’ என வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக் கான 50 சதவீத இடஒதுக் கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா என்பது குறித்தும், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஓ.பி.சி. மாணவர்களுக்கு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்குத் தள்ளி வைத்தனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஹைதராபாத் அணியை செதுக்கிய சென்னை: 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை 3 வது வெற்றி

Next Post

இன்றைய ராசிபலன்….

Next Post

இன்றைய ராசிபலன்....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version