சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று பட டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சூர்யா, ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்ட படத்தைக் கொடுக்க முடிவு செய்து , எகனாமிக் பட்ஜெட்டில் மக்களுக்கு விமான சேவையை அறிமுகம் செய்த கோபிநாத்தின் வாழ்க்கை யை மையப்படுத்தி சூரரைப் போற்று என்ற படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இப்படம் பலகட்டங்களுக்குப் பிறகு தடையில்லாச் சான்றிதழைப் பெற்று, வரும் 26 ஆம் தேதி (இன்று ) இப்படத்தின் டிரைலர் ரிலீசாக உள்ளது.,அதனால் ரசிகர்கள் ஹேஸ்டேக் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று பட டிரைலரை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது.
அதேபோல் இப்படத்தை தீபாவளிக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் இப்படம் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலர் இதோ….




