ஏர் ஓற்றவன் ஏரோபிளேன்ல போவான் என்ற கெத்தான வசனத்தோட சமீபத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் பற்றிய ஒரு பார்வை. சுவையான தகவல்கள் உள்ளே.

ட்ரைலர் சுவாரஸ்யமா இருக்கு. ஆங்காங்கே வர்ற வசனங்கள் உறுதியா தெளிவா வெச்சிருக்காங்க. பின்னணி இசை எப்போதுமே பார்த்து வழக்கப்பட்டது போல் இல்லாம புதுசா இருக்கு. ஏற்கனவே வெளியான பாடல்கள் நல்ல பிரபலமா ஆகியிருக்கிறது ஆச்சர்யமே இல்ல. ஜி.வி.பிரகாஷ் பாராட்டியே ஆகணும்.
ட்ரைலர்ல இருக்கிற வேகம் படத்துலயும் இருந்தா கண்டிப்பா சக்ஸஸ் தானு தோணுது. ஏய், ஏய் னு ஹீரோவும் வில்லனும் மாத்தி மாத்தி கத்தி வசனம் பேசற காட்சிகள் ட்ரைலர்ல வரல. கம்மர்ஷியல் கதைல பஞ்ச் வசனங்கள் இல்லாம எடுத்திருக்காங்க என்பது சூப்பர் விஷயம்.
சூர்யாவோட லுக் பத்தி சொல்லனும்னா வேஷ்டி,சட்டை, கண்ணாடி எல்லாம் போட்டுட்டு ஸ்டைல் ஆக வராரு. நல்லா படிச்ச துணிவான கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு ஏத்த கெட்டப். சக நடிகர்கள் எல்லாருக்கும் உடைகள், ஒப்பனை எல்லாமே நல்லா பொருந்தியிருக்கு.
கதைல ஹீரோவுக்கு ஒரு பெரிய கனவு. எல்லாரையும் விமானத்துல பறக்க வெக்கணும். 1 ருபாய் டிக்கெட்டுல கிராமத்து ஆட்களையும் பிளைட்ல ஏத்தணும் னு ஒரு விமானக் கம்பெனி ஆரம்பிக்க முயற்சி பண்றாரு சூர்யா. நெறய எதிர்ப்பு வருது. அத எல்லாத்தையும் சமாளிச்சு வெற்றி அடையறாரா என்பது படத்துல பாக்கணும். ஏர் ஓற்றவன் ஏரோபிளேன்ல போவான் என்ற வசனம் செம.
சூர்யாவுக்கு ஏற்ற கதாபாத்திரம் இது என்பதுல சந்தேகமே இல்ல. ஆயுத எழுத்து படத்துல பார்த்த மைக்கேல் வசந்த் கிட்ட தெரிஞ்ச அந்த வேகம், ஆதங்கம் இதுல தெரியுது. அவனுங்க என்ன பண்ணிடுவாங்க, பாத்துடுவோம் என்று களத்துல எறங்கி விளையாடுவார் சூர்யா என்று எதிர்பாக்கலாம். அவர் நிஜத்துலயும் சில நியாயங்களுக்கு குரல் கொடுப்பவர் அப்டினு நமக்கு தெரியும். அதனால இந்தக் கதையோட அவர சுலபமா தொடர்பு படுத்திக்க முடியுது.
கிராமத்துப் பெண், சூர்யாவின் குணம்,நோக்கம் புரிந்து அவரைக் காதலிக்கும் பெண்ணாக கதாநாயகி. அழகா இருக்காங்க, குறிப்பா சொல்லனும்னா அவங்களோட கண் தீர்மையா அழகா இருக்கு. கதையின் களத்துல காதலுக்கு பங்கு கொஞ்சம் கம்மி தான் என்றாலும், அவங்க எந்த அளவுக்கு கதைல ஒன்றியிருக்காங்க என்பதை படத்துல பார்த்தா தான் தெரியும்.
ஹீரோ, வில்லன் ஒரு பிரச்சனை என்ற அமைப்பு தான் என்றாலும் பார்த்தே ஆகவேண்டும் என்று ஏதோ ஒன்று நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. படத்தின் வெற்றிக்கு இசை கண்டிப்பா ஒரு காரணமா இருக்கும். கதைல இருக்கிற நல்ல அம்சங்கள திரைக்கதைல சுவாரஸ்யமா காட்டினா இந்தப் படம் மக்கள் கிட்ட நல்லா சேர்ந்துடும்.
சுதா கொங்கரா இயக்கத்துல, ஜி.வி.பிரகாஷ் இசைல சூர்யா,அபர்ணா நடிச்சு ரெடி ஆகியிருக்கிற இந்தப் படம் பார்த்துட்டு பேசுவோம், எப்படி இருக்கு ஓகேவா இல்லையா என்பதையெல்லாம்.




