இரு சிறுநீரகங்களும் செயலிழந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்.

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்.
நடிகர் விஜய் சமீபத்தில் தனது விஜய் மக்கள் இயக்க தமிழக நிர்வாகிகளைச் சந்தித்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
அதற்கேற்ப அவரது தம்பிமார்கள் மக்களுக்கு உதவி வருகின்றனர். இதில், ஒரு இளைஞரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் நிதி உதவி செய்துள்ளன விஜய் மக்கள் இயக்கத்தினர்.
வேலூர் மாவட்த்தில் உள்ள சலவன்பேட்டையில் வசித்து வரும் சரவணந் கலா தம்பதியினரின் மூத்த மகன் ரவி( 18).இவருக்கு சிறு வயதில் இருந்தே இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்ததால், நாளடையில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன.
இந்நிலையில் அவரது பெற்றோர் தங்களின் சொந்த செலவில் தங்களின் மகன் ரவிக்கு மாதம் ரூ. 60 ஆயிரம் செலவழித்து வேலூரில் உள்ள தனியர் மருத்துவமனையில் டயாசிலிஸ் செய்து வந்துள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் அதற்கு ரூ.12 லட்சம் செலவாகும் என கூறியுள்ளனர்.
இதைக்கேட்ட பெற்றோரின் தங்களின்சிறுநீரகத்தை மகனுக்குக் கொடுக்க முன்வந்தனர். ஆனால் இதற்காக மருத்துவச் சிகிசைக்கு பணம் இல்லாமல் தவித்துள்ளனர்.
எனவே வேலூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் ரவியின் சிகிச்சைக்கு நிதி திரட்டி ரூ.1 லட்சத்தை ரவியின் பெற்றோரிடம் கொடுத்துள்ளனர். மேலும் இளைஞரின் மாற்று சிறுநீரக சிகிச்சைக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் உதவி செய்யவுள்ளதாகவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



