வங்கி நடைமுறையில் புதிய திட்டம்.. இனி காசோலை மோசடிக்கு வாய்ப்பு இல்லை – ரிசர்வ் வங்கி அதிரடி

வங்கி நடைமுறையில் புதிய திட்டம்.. இனி காசோலை மோசடிக்கு வாய்ப்பு இல்லை – ரிசர்வ் வங்கி அதிரடி

காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி, அதனை ஜனவரி முதல் நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

வாடிக்கையாளரின் கையெழுத்திட்ட காசோலைகள் தொலைந்து விட்டாலோ, தவற விட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் வங்களில் பணம் பெற வாய்ப்புள்ளது.

இதை தடுக்க, சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு வாடிக்கையாளர் தகவல் தெரிவித்து பணம் கொடுப்பதை நிறுத்திவதை தவிர வேறு வழியில்லை. ஆனால், இதில் தகவல் பரிமாற்ற தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அது தொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று புதிய முறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

காசோலை துண்டிப்பு எனும் முறையில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இத்திட்டத்தின் மூலம், ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை கொண்ட காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் குறுந்தகவல், வங்கி செயலி, நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் சம்மந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் பணத்தை பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வேண்டும்.

ரூ.5 லட்சத்திற்கு அதிகமான தொகை உள்ள காசோலைகளுக்கு இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் காசோலை முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். இந்த புதிய முறை குறித்து சம்மந்தப்பட்ட வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல், வங்கிகளில் அறிவிப்பு பலகை ஆகியவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *