தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

மேக்கும், கடந்த சில மாதங்களாக மாஸ்டர் படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தீபாவளியை முன்னிட்டாவது படத்தின் டீசர், டிரெய்லர் என எதையாவது வெளியிடும்படி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனிடையே, தியேட்டர்களும் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வரும் 14ம் தேதி தீபாவளி அன்று மாஸ்டர் பட டீசர் வெளியிட உள்ளதாக மாஸ்டர் படக்குழு டுவிட் செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கூடுதலாக, புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. படு மாஸ் ஆக உள்ள இந்த போஸ்டரை இணையத்தில் வைரலாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.




